தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர் |
[அ ][ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ ] |
[க] [கா] [கி] [கீ] [கு] [கூ] [கெ] [கே] [கை] [கொ] [கோ] |
[ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சை] [சொ] [சோ] |
[ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ] |
[ந] [நா] [நி] [நீ] [நு] [நூ] [நெ] [நே] [நை] [நொ] [நோ] |
[ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ] |
[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] |
[யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ] |
[பொதுவானவை] |
Showing posts with label ஆண் பெயர். Show all posts
Showing posts with label ஆண் பெயர். Show all posts
தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 5:56 PM 7 comments
Labels: ஆண் பெயர்
தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்-பொதுவானவை
அனைத்திலும் விடுபட்டவை
அ அகன் - உள்ளத்தன் அஞ்சான் - அஞ்சாதவன், அச்சமற்றவன் அஞ்சி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர் அண்ணல் - தலைமைப்பண்புடைவன் அத்தி - தமிழரசன் ஒருவனின் பெயர் அப்பன் - மேலோன் அம்பி - ஓடம் அமுதன் - இனியவன், அமுதத்தையொத்தவன் அமுது - இனிமை அரசன் - வேந்தன் அரசு - வேந்து அரியன் - அருமையானவன், அரிபோன்றவன் அருவி - நீரூற்று, மலையின்வீழ்புனல் அலை - நீரலை, நீர்த்திரை அழகன் - அழகானவன் அழகு - எழில் அறவன் - அறமுடையவன் அறவோன் - அறமுடையவன் அறிஞன் - அறிவுடையவன் அறிவன் - அறிவுடையவன் அறிவு - அறிவுடையவன் அன் - ஆண்பால்ஈறு அன்பன் - அன்புடையவன் அன்பு - அன்புடைமை ஆ ஆளன் - ஆள்பவன் ஆளி - ஆள்பவன் ஆற்றல் - திறனுடையவன் ஆற்றலன் - திறலன், திறலோன் இ இசை - புகழ், பண் இசைஞன் - பாடகன் இயன் - பின்னொட்டு இன்பம் - உவகை, மகிழ்ச்;சி இன்பன் - மகிழ்ச்சியுடையவன் இனியன் - இனிமையானவன் உ உடையான் - உடையவன் உரவோன் - உறுதியுடையவன் உருவன் - உருவமுடையவன் உழவன் - உழுபவன் உறைவோன் - வாழ்பவன் - தங்குபவன் ஊ ஊரன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன் ஊரான் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன் ஊரோன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன் எ எரி - நெருப்பு எழிலன் - அழகன், எழுச்சியுடையவன் எழிலான் - அழகன், எழுச்சியுடையவன் எழிலோன் - அழகன், எழுச்சியுடையவன் எழினி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர் எளியன் - எளிமையானவன் எளியோன் - எளிமையானவன் ஏ ஏந்தல் - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன் ஏந்தி - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன் ஏரன் - உழவன், அழகன், எழுச்சியுடையவன் ஏறு - ஆண்புலி, ஆணரிமா, காளை ஐ ஐயன் - தலைமைப்பண்பினான், மேலோன் ஐயா - தலைமைப்பண்பினான், மேலோன் ஒ ஒலி - ஓசை ஒலியன் - ஒலிப்பவன் ஒளி - வெளிச்சம் ஒளியன் - ஒளியையுடையவன் ஓ ஓவியன் - சித்திரம்வரைபவன் கடல் - பருமை, பெருமை, மிகுதி கண்ணன் - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன் கண்ணு - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன் கணை - அம்பு கதிர் - பகலவன், ஞாயிறு, சுடர்,கூலக்கதிர் கதிரவன் - பகலவன், ஞாயிறு, சுடர் கதிரன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர் கதிரோன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர் கரை - எல்லை கலை - கல்;வி கலைஞன் - கல்வியுடையவன் கழியான் - கழிநிலத்தவன் கனல் - நெருப்பு கனி - பழம், இனிமை கா காடன் - காட்டிலுறைபவன், காடுடையான் காரி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர் காவலன் - காப்பவன் கி கிழான் - உரிமையுடையவன் கிள்ளி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர் கிளி - கிள்ளை கீ கீரன் - கழகப்புலவரொருவர் பெயர் கு குடிமகன் - குடிப்பிறப்புடையோன், குடிப்பிறந்தோன் குமரன் - இளமையுடையவன், இளைஞன் குரிசில் - உயர்ந்தோன், தலைவன், பெரியோன் குளத்தன் - குளத்தையுடையவன் குன்றன் - குன்றிலுறைபவன், குன்றையுடையவன், குன்றனையன், பெரியோன் கூ கூடலன் - கூடனிலத்தவன் கூத்தன் - ஆடுபவன் கே கேழன் - நிறத்தன் கேள்வன் - அன்பன், உறவினன், நண்பன் கொ கொடி - கொடி கொடியோன் - கொடியையுடையவன் கொழுந்து - சுடர், இளந்தளிர், இளமை, மென்மை கொற்றவன் - வேந்தன், வெற்றியுடையவன், காவலன் கொற்றன் - வெற்றியுடையவன் கொன்றை - ஒருமரம் கோ கோ - வேந்தன் கோடன் - மலையன் கோதை - தமிழரசன் ஒருவன்பெயர், மாலை கோமான் - அரசன், வேந்தன் கோவன் - அரசன், வேந்தன் கோன் - அரசன், வேந்தன் சா சந்தனம் - மணங்கமழ்மரம், மணச்சாந்து சாந்து - சந்தனச்சாந்து சாரல் - பக்கமலை சான்றோன் - பெரியோன் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் (அருள்), வாய்மை ஆகிய ஐந்து குணங்களுடையவன் | சீ சீரன் - சிறப்புடையவன் சீராளன் - சிறப்புடையவன் சீரோன் - சிறப்புடையவன் சு சுடர் - ஒளி சுடரோன் - ஒளியுடையவன் சுனை - நீர்ச்சுனை சுனையான் - நீர்ச்சுனையையுடையவன் சூ சூடன் - அணிந்தவன் சூடி - அணிந்தவன் செ செந்தில் - ஓரிடப்பெயர் செம்மல் - தலைமைப்பண்புடையவன் செல்வன் - செல்வமுடையவன் செழியன் - பாண்டியவரசர் குலப்பெயர் சென்னி - சோழவரசர் குலப்பெயர் சே சேந்தன் - செம்மையானவன், சிவந்தவன் சேய் - குழந்தை, சிவந்தவன் சேரலாதன் - சேரர்குலப் பேரரசன் ஒருவன்பெயர் சேரன் - சேரமன்னர் குலப்பெயர் சோலை - பொழில் சோலையன் - சோலையையுடையவன் சோழன் - சோழவரசர் குலப்பெயர் த தகை - தகுதியுடையவன், தகைமையுடையவன் தகையன் - தகுதியுடையவன், தகைமையுடையவன் தங்கம் - தங்கம் தங்கன் - தங்கம் போன்றவன், தங்கத்தையுடையவன் தணலன் - நெருப்னையவன் தணிகையன் - தணிகை என்னும் இடத்தைச்சேர்ந்தவன் தம்பி - பின்பிறந்தவன், இளையவன் தமிழ் - இனிமை, நீர்மை தமிழன் - தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவன் தலைவன் - முதன்மையானவன், முதல்வன் தழலன் - நெருப்பனையன் தழலோன் - நெருப்பனையன் தனையன் - மகன் தா தாரான் - மாலையணிந்தவன் தாரோன் - மாலையணிந்தவன் தாளன் - முயற்சியுடையவன் தானையன் - படையுடையவன் தி திண்ணன் - உறுதியுடையவன் திருவருள் - அருளுடையவன் திருவன் - செல்வமுடையவன் திறத்தன் - திறமையுடையவன், தன்மையுடையவன் திறல் - திறமையுடையவன் திறலோன் - திறமையுடையவன், தன்மையுடையவன் தீ தீ - நெருப்பு து துணை - உதவி துணைவன் - உதவுபவன், நட்பினன், துணைநிற்பவன் துரை - மேலானவன் துறை - துறைசார்ந்தவன் துறைவன் - கடனாடன், நெய்தல்; நிலத்தவன், துறைசார்ந்தவன் தூ தூயவன் - தூய்மையானவன், பண்புடையோன் தூயன் - தூய்மையானவன், பண்புடையோன் தூயோன் - தூய்மையானவன், பண்புடையோன் தெ தெய்வம் - மேலோன் தென்றல் - இளங்காற்று தென்னவன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர் தென்னன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர் தே தேவன் - மேலோன் தேறல் - தேன் தேன் - இனியவன், தேனனையவன் தொ தொடை - மாலை தோ தோணி - ஓடம் தோழன் - தோழமையுடையவன், துணைவன் தோன்றல் - தலைவன், மேலோன் ந நம்பி - ஆடவருட்சிறந்தவன் நல்லன் - நல்லவன் நல்லோன் - நல்லவன் நன்னன் - தமிழ்ச்சிற்றரசன் ஒருவன் பெயர், நன்மையுடையவன் நா நாகன் - தமிழர் பண்டைக்குலப்பெயர் நாடன் - நாட்டையுடையவன,; நாட்டைச்சார்ந்தவன் நாவன் - நாவில் வல்லவன், சொல்வன்மையுடையவன் நி நிலவன் - நிலவுபோன்றவன் நிலவு - நிலவுபோன்றவன் நெ நெஞ்சன் - உள்ளமுடையவன் நெடியோன் - உயர்ந்தவன், பெரியோன் நெறியன் - நல்வழிச்செல்வோன் நே நேயன் - அன்பன் நேரியன் - நேர்மையானவன் ப பகலவன் - ஒளியுடையவன், ஞாயிறு பகலோன் - ஒளியுடையவன், ஞாயிறு பரிதி - ஒளியுடையவன், ஞாயிறு பா பா - பாட்டு பாடி - பாடுபவன் பாண்டியன் - முதற்றமிழரசர் குலப்பெயர் பாரி - தமிழ்க்குறுனிலமன்னன்பெயர்(வள்ளல்) பாவலன் - பாவில்வல்லவன் பி பித்தன் - ஊன்றிய உணர்வுடையவன் பிள்ளை - பிள்ளை பிறை - பிறைமதி பு புகழ் - மேன்மை புகழன் - புகழுடையவன் புகழோன் - புகழுடையவன் புதியவன் - புதுமையானவன் புரவலன் - காவலன், அரசன் புலவன் - புலமையுடையவன் பூ பூவன் - மலர்போன்றவன் பெ பெரியன் - பெருமையுடையவன், உயர்ந்;தோன், சான்றோன். பே பேகன் - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர். | பொ பொருநன் - போர்செய்பவன், ஒப்பானவன் பொருப்பன் - மலைநாடன், மலைபோன்றவன். பொழில் - சோலை பொழிலன் - சோலையையுடையவன் பொறை - பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர் பொறையன் - பொறுமையுடையவன் பொன்னன் - பொன்போன்றவன், பொன்னையுடையவன் போ போர் - அமர் போரோன் - போர்செய்பவன், போர்க்குணமுடையவன் ம மகன் - ஆண்மகவு, ஆடவன் மணி - மதிப்புடையவன், அழகுடையவன் மதி - அறிவு, திங்கள், நிலவு மருகன் - மரபினன், மருமகன் மருதன் - மருதநிலத்தவன், வயலூரான் மல்லன் - வீரன், போர்வலியன் மலை - உறுதி, பெருமை மலையன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன் மலையோன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன் மழவன் - இளமையானவன் மள்ளன் - வலிமையுடையவன், இளைஞன், படைவீரன் மறவன் - வீரன் மன்னன் - அரசன் மா மா - செல்வம், பெருமை, வலி, அழகு மாண்பன் - மாட்சிமையுடையவன் மார்பன் - மார்பையுடையவன் மாறன் - பாண்டியமன்னர் குலப்பெயர் மான் - ஆண்பால் ஈறு மானன் - மானமுடையவன் மி மின்னல் - ஒளி மு முகன் - முகத்தையுடையவன் முகிலன் - முகில்போன்றவன் முடி - தலைமை முத்தன் - முத்துப்போன்றவன், முத்தையுடையவன் முத்து - முத்துப்போன்றவன், முத்தையுடையவன் முதல்வன் - தலைவன், முன்னவன் முரசு - போர்முரசனையர், வெற்றிமுரசனையர் முருகன் - அழகன் முருகு - இளமை, அழகு முறுவல் - நகையுணர்வுடையவன் முறையோன் - நெறியுடையோன் முனைவன் - முன்னவன், தலைவன், முதல்வன் மெ மெய்யன் வழுதி மெய்யன் - உண்மையுடையவன் மே மேழி - கலப்பை (உழுபவன்) மை மைந்தன் - வீரமுள்ளவன், மகன், இளையவன் மொ மொழி - மொழி மௌ மௌவல் - முல்லை யா யாழோன் - யாழையுடையவன் வ வடிவேல் - கூர்வேல் வண்ணன் - அழகன் வரம்;பன் - எல்லையானவன் வல்லவன் - ஆற்றலுடையோன் வல்லோன் - ஆற்றலுடையோன் வலவன் - ஆற்றலுடையோன் வழுதி - பாண்டியர் குலப்பெயர் வள்ளல் - வரையாது வழங்குபவன் வளத்தன் - வளமுடையவன் வளவன் - வளமுடையவன் வா வாகை - வெற்றி, வெற்றிமாலை வாணன் - ஆற்றலுடையவன் வாள் - வாளனையவன் வி வில் - வில்லனையவன் வில்லவன் - வில்லனையவன் வில்லோன் - வில்லனையவன், வில்லையுடையவன் விழியன் - கண்ணழகுள்ளவன், கண்ணுடையவன் விளம்பி - சொல்லுபவன் விறல் - வீரம், வெற்றி விறலன் - வீரன், வெற்றியன். விறலோன் - வீரன், வெற்றியன் வீ வீரன் - வீரமுள்ளவன், மறமுடையோன் வெ வெண்ணி - ஓரூர் வெற்பன் - மலைநிகர்த்தவன், மலையுடையவன் வெற்றி - வெற்றியடைதல் வெற்றியன் - வெற்றியுடையன் வென்றி - வெற்றியுடையன் வென்றியன் - வெற்றியுடையன் வே வேங்கை - புலி வேந்தன் - காவலன், அரசன் வேல் - கூர்ங்கருவி வேலன் - வேலையுடையவன் வேலவன் - வேலையுடையவன் வேலோன் - வேலையுடையவன் வேள் - விரும்பப்படுபவன் வேளிர் - தமிழ்க்குறுநிலமன்னர்; குலப்பெயர் (சேரர்) |
Posted by எல்லாளன் at 12:57 PM 3 comments
Labels: ஆண் பெயர், பொதுவானவை
Subscribe to:
Posts (Atom)